நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலை முன்னிட்டு அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வணிக நிறுவனங்களை மூடுமாறு அச்சுறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இன்றைய தினம் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.