நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை முதல் சில சேவைகளை விலக்கிக் கொள்வதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய அனைத்து விமான நிலையங்களிலும் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து அவர்கள் விலக முடிவு செய்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.