ஆட்பதிவுத்திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இன்றைய தினம் (06) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத்திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.