அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இதன்படி, இன்றைய தினம் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்றும் விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 361.72 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.