யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த குறித்த நபர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றபோது அவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து, மதுபோதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்திய குற்றச்சாட்டில் அவர் மீது மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, அந்நபர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தது.