ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடு முழுவதும் ஆரம்பமான எதிர்ப்பு போராட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் ஹர்த்தல் நடைபெற்று வருகிறது.
அரச , கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் துறையின் ஊயழிர்கள் மிகப் பெரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் நாடாளுமன்றத்திற்கு அருகில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளிலும் பேரணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி இன்று மாலை அவசரமான அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.