அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பல்கலைக் கழகத்தில் மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மக்களை வதைக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் 2000 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்களால் நாடு பூராகவும் கதவடைப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இணைந்து வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ எங்கள் வளமே எங்கள் வாழ்வு, மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள், மக்களுக்காகக் கொள்கைகளே தவிர கொள்கைக்காக மக்கள் அல்ல, சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமமானது, எங்கள் எதிர்காலத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.