தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால், அராஜகம் தலைதூக்கும் அபாயம் இருப்பதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய இன்று எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜெயசூரிய, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கையில் வழக்கமான தனியார் மருத்துவ சேவைகள் கூட நிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களுக்குப் பொருத்தமான தீர்வைத் தயாரிப்பதற்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும்.
இந்தநிலையில் நாடாளுமன்ற முறை மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்தால், அராஜகம் தலைதூக்கும் என்று ஜெயசூரிய எச்சரித்துள்ளார்.
தமது அறிக்கையில், முன்னாள் கிரிக்கெட் வீரர், விஸ் கலிஃபாவை (wiz Khalifa) மேற்கோள் காட்டியுள்ள அவர், முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது தவறிலிருந்து நாங்கள் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டோம். கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே அது நம்மைத் தாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்கள் தங்கள் ஜனநாயக அபிலாஷைகளை அடைய சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.