அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையைத் தீர்ப்பதற்கான 13 அம்ச திட்டமொன்றை அரச தலைவரிடம் இன்று முன்வைத்தது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசமைப்புச் சட்டத்திற்கு அமைய அரசாங்கம் பரிசீலிக்கும் என அரச தலைவர் தெரிவித்ததாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் தலையீட்டின் காரணமாக இன்னும் 4 மாதங்களில் மிக முக்கிய தலைர் ஒருவர் வெளியேறுவார்..! பதவியும் ஒழிக்கப்படும்..! சக்தி வாய்ந்த நாடுகளின் உதவியும் கிடைக்கும்..! சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவின் பிரகாரம் ஐ.ம.ச.யும் கருவும் நாட்டைக் கைப்பற்றத் தயார் என்று சமூக ஆர்வல் ஜீவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவின் பிரகாரம் ஆட்சி நடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஓரளவு ஏற்பதற்கு முடிவாகி விட்டது என மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.