காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் இன்று காலை மைனா கம மற்றும் கோட்டா கமவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
காலி முகத்திடல் நோக்கி விரைந்துள்ள அரச ஆதரவாளர்கள் கலக செயல்களில் ஈடுபட்டுவருவதுடன், காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை தகர்த்தெறிந்தனர்.
போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது மீளவும் உருவாக்கப்படுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.