இலங்கையில் நேற்று பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என அவரது சகோதரர் நளின் வெல்கம தெரிவித்துள்ளார்.
எனினும், குமார் வெல்கம தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பதாகவும், அவரது உடல்நிலை நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“எந்த எலும்பு முறிவுகளும் இல்லை. வெறும் வெட்டுக் காயங்களே உள்ளன. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று நளின் வெல்கம தனது ட்விட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.