நாட்டில் ஏற்பட்டுள்ள மருத்துவ உபகரண பற்றாக்குறை காரணமாக எதிர்ப்பு நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் வன்முறை நிலைமை நீடிக்குமாயின், சுகாதார கட்டமைப்பின் கொள்ளளவுக்கு அப்பால், நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படக்கூடிய அபாய நிலை உள்ளாகும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, எதிர்ப்பு நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் பணி பகிஸ்கரிப்பு நாளை வரை நீடித்துள்ளதாகவும், அதன் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.