முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு’ ஒப்பானது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உடனிருக்கும் சகோதரர்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காமல் நாட்டு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்திருந்தால் நாடு தற்போது இவ்வாறான அவலநிலையை எதிர்க்கொண்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.