தற்போதைய வன்முறைகள் நிறைந்த நிலை தொடருமானால், வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும்.
இதனால் ஏற்கனவே வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பொருட்களுக்காக தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
அமைதியான முறையில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுக் குழு அங்கத்தவர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே பொது மக்களிடம் கோரியுள்ளார்.
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்த பொது மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளது.
இதன்போது அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.