நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள போதிலும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெசாக் பண்டிகைக்காக வெசாக் பந்தல்கள் மற்றும் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, கொழும்பில் உள்ள பழமையான பந்தல்களில் ஒன்றான ‘தெமட்டகொட தொரண’ இன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வெசாக் அலங்காரங்கள் தெமட்டகொட மற்றும் பொரளை பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



















