பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, டலஸ் அலகப்பெரும, விஜயதாஸ ராஜபக்ச, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.