இலங்கையில் அணைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விசேட பணிப்புரை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படுவதால், அனைத்து அரச பாடசாலை அதிபர்களும் பாடசாலைகளை வழமை போன்று நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அரச பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தனர். அதன்படி, பாடசாலைகள் இயங்குவது தொடர்பான தீர்மானம் ஏற்கனவே அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


















