பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சண்டையிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
இந்தநிலையில் அந்தப் பதவிக்கு ஏகமனதாக பெண் ஒருவரை நியமிக்குமாறு கோரி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இவ்வாறான நிலைப்பாடுகளுக்காக பிரிந்து சண்டையிடுவதற்கான நேரம் இதுவல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அந்த பதவியை வழங்குமாறு கோரியுள்ளார்.
நாடாளுமன்றம் மே 17ம் திகதி கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.