பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதம் இன்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை புதிய அரசாங்கத்தில் அங்க வகிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியை ஏற்க தயாரென அறிவித்த சஜித்
புதிய அரசாங்கத்தில் பிரதமராகப் பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு முகங்கொடுத்து குறுகிய கால அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய சஜித்திற்கு வழங்கிய பதில்
எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி பதில் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அதில், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை மாற்ற இயலாது என்றும், சஜித் பிரேமதாச முன்வைத்த சில நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதிக்கு மீண்டும் சஜித் அனுப்பிய கடிதம்
பிரதமர் பதவி குறித்த ஜனாதிபதியின் விளக்கக் கடிதத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதிலளித்துள்ளார்.
அதில், மக்களின் ஆணையை நேரடியாகப் புறக்கணித்து ஜனாதிபதி நியமிக்கும் உத்தேச அமைச்சரவைக்கு எந்தவொரு உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.