“இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து தான் மேம்பாடு அடையும் என்பதைச் சர்வதேச ஊடகத்துக்குக் கருத்து தெரிவிக்கும் போது புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாகக்” கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலைமை இரண்டு, மூன்று கிழமைகளில் உறுதி நிலையை அடையாவிட்டால் தன்னால் கொண்டு நடத்த முடியாது, மிகப்பெரிய பிரச்சினைகள் வரப்போகின்றன என்பதையும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.