மத்திய வங்கி மீண்டும் பணத்தை அச்சிடாவிட்டால் அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராஜபக்ஸ தரப்பினர் மற்றுமொரு தேர்தலில் வெற்றி பெறும் நிலை காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் கருத்து வெளியிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.