கடந்த வாரம் அனுராதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் பிரபல வர்த்தகர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் அனுராதபுரத்தில் பிரபல வர்த்தகர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் அனுராதபுரத்தில் வசிப்பவர்கள், மற்றையவர் மிஹிந்தலையில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















