ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான 46 வயது ஆன ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அணிக்காக 2004 மற்றும் 2008 க்கு இடையில் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
1999 முதல் 11 வருட வாழ்க்கையில் 198 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி பல சாதனைகளையும் படைத்தவர்.
அதேப்போல் இரண்டு உலகக் கோப்பை வென்ற அணிகளில் உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஹெர்வி ரேஞ்சில் என்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
கார் சாலையில் உருண்டு சென்றதால், பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை குயின்ஸ்லாந்து காவல்துறையினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இவரின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் தான் மறைந்த முன்னாள் வீரர் ஷேன் வார்ன் நினைவிடத்தில் கலந்துகொண்டார். இவரின் மறைவு அடுத்த சோகமாக மாறியுள்ளது.
50 ஓவர் போட்டிகளில் விளையாடி இவர், 5088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.




















