இசையமைப்பாளர் இமான் அவரின் முன்னாள் மனைவி மோனிகா மீது பொய் வழக்கு போட்டு துரோகம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி இசையமைப்பாளரான இமான் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் கடைசியாக இவர் இசையமைத்த அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் படங்களின் பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனது மனைவியை பிரிந்த இமான் சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இமான் தனது முன்னாள் மனைவி மீது வழக்கு ஒன்றை தொடுத்து இருந்தார்.
தனது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக தனது முன்னாள் மனைவி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளதாக இமான் புகார் அளித்திருந்தார்.
முன்னாள் மனைவி விளக்கம்
இதனை அடுத்து இவரது முன்னாள் மனைவி இது பொய்யான புகார் என்பதற்கான விளக்கத்தை அளித்திருந்தார்.
இந்நிலையில் குழந்தைகளின் பாஸ்போர்ட்டை மோகினா இமானிடம் கேட்டபொழுது அது தொலைந்துவிட்டதாக இமான் கூறியதாக மோனிகா தெரிவித்துள்ளார்.
எனவே இதை வைத்து பார்க்கையில் இமான் தனது முன்னாள் மனைவி மோனிகா மீது பொய்யான வழக்கு போட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகளின் கஸ்டடி வைத்திருக்கும் மோனிகாவை தவிர இமானுக்கு குழந்தைகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் உரிமை இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.