கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.