அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்புகள் அவுஸ்திரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகின. பிற்பகல் 6 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
17 மில்லியன் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர். நேற்றைய தினம் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தபால் மற்றும் முன்கூட்டியே தமது வாக்குகளை அளித்துள்ளனர்.
நான்காவது முறையும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் ஸ்கொட் மோரிசன் தலைமையில் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தேசியவாத கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது.
பிரதான எதிர்க்கட்சியான எதிர்க்கட்சித் தலைவர் அன்டனி ஹெல்பனீஸ் தலைமையிலான தொழிற்கட்சியும் ஆட்சியை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் போட்டியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ரஞ்ஜி பெரேரா, விரோஷ் பெரேரா ஆகியோர் லிபரல் ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் கேசன்ட்ரா பெர்னாண்டோ தொழிற்கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
ரஞ்ஜி பெரேரா மற்றும் கேசேன்ட்ரா ஆகியோர் மெல்பேர்னின் ஹோல்ட் தொகுதியில் போட்டியிட்டுள்ளமை சிறப்பம்சமாகும். வாக்கெடுப்பு முடிந்து தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறன.