இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய,”தக்காளி ஒரு கிலோ ரூ.1,000.00, போஞ்சி ரூ.480.00, கரட் ரூ.400.00, மிளகாய் ரூ.480.00 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகர்கள் வராமை போன்ற காரணிகளால் தம்புத்தேகம விசேட பொருளாதார வலயத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டுள்ளனர்.
இதனிடையே உரம் தட்டுப்பாடு காரணமாகவும் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரிசி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.