மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்சரித்ததற்காக சிறைக்குச் செல்லத் தயார்” என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“கடந்த வாரம் இலங்கையில் நடந்தது போல் மலேசியாவின் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீவைக்கப்படுமா?” என்று லிம் கிட் சியாங் தனது ட்வீட்டரில் கருத்து ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
அப் பதிவு தொடர்பிர் அந்நாட்டு குற்றவியல் சட்டத்தின் படி தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
மலேசியாவின் முன்னாள் பிரதம மந்திரி டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கைத் திட்டிய லிம், “மலேசியாவின் அவமானம், இழிவு மற்றும் அக்கிரமத்தால் “மோசமான நிலையில் உள்ளது” என்று தனது ட்வீட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றொரு இலங்கையாகவோ அல்லது பிலிப்பைன்ஸாகவோ மாறுவதற்குப் பதிலாக உலகத் தரம் வாய்ந்த சிறந்த தேசமாக மாற, மலேசியர்கள் மலேசிய அரசியலமைப்பின் படி தேசத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.