நாட்டில் 15 வருடங்களுக்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து வேறு ஒருவருக்கு கையளிக்க விரும்புகின்றார் என ஆங்கில ஊடகமொன்றை மேற்கோள்காட்டி பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
21ஆவது திருத்தமாக 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் ஜனாதியொருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சர் பதவியை ரமேஸ் பத்திரனவிற்கு வழங்க ஜனாதிபதி முன்வந்த போதும் அவர் அதனை ஏற்கவில்லை என்பதாலேயே அவரே அமைச்சராக பதவியேற்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.