முக்கிய சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மீது தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பெண் ஒருவரை கண்டுபிடித்த பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் தோன்றிய பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்துள்ளார்.
இதற்கு சம்பந்தப்பட்ட காணொளி காட்சிகள் மூலம் குறித்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 859 4949 அல்லது 071 419 66 09 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொதுமக்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.