நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினர் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட தகாத நடவடிக்கைகள் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.
எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற காரணங்களை முன்னிட்டே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட எரிபொருள் கேள்வியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்திருப்பதாகவும் எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது