அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி நிலையில் பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.