இலங்கையின் மின்வலுத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அமெரிக்கா பத்தொன்பது மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நிதியுதவியைக் கொண்டு புத்தாக்க மற்றும் மீள்பயன்பாட்டு சக்தி வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
புத்தாக்க மற்றும் மீள்பயன்பாட்டு சக்தி வளங்கள் அபிவிருத்தி
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.



















