ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான தமது இயக்கத்தை பரந்தளவிலான பங்கேற்புடன் கூடிய அணிவகுப்புகளுடன் தீவிரப்படுத்தப் போவதாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் ஏற்பாட்டாளர்கள் இன்று தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுமாறு கோரி அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோத்தாபயவின் அலுவலகத்தில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது.
மிக மோசமான நிதி நெருக்கடி
வாகன எரிபொருள், சமையல் எரிவாயு, அனல் மின் உற்பத்திக்கான எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்வதால், இலங்கை தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
நிதி நெருக்கடியானது அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது, இது ஏற்கனவே ஜனாதிபதியின் மூத்த சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது.
இருந்த போதிலும், கோட்டாபயவின் பதவி விலகல் கோரிக்கைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணத்தையும் கண்ட “கோ ராஜபக்ஷ” போராட்டம் இன்று 50 வது நாளை நிறைவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.