எரிபொருள் விலையேற்றத்தால் புகையிரத திணைக்களத்திற்கு நாளாந்தம் 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
இதையடுத்து ,மேலதிக ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணம் அதிகரிப்பு
இதேவேளை , பஸ் கட்டண அதிகரிப்பினால் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
மேலும் அத்தியாவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கும் பொது நிர்வாக சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.