விஜய் டிவி தொலைக்காட்சியின் தொகுப்பாளரான விஜே பிரியங்கா மக்களின் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா சிங்கர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இரண்டாவது பரிசையும் வென்றார். தற்போது பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலக முடிவு எடுத்ததாக முடிவெடுத்து இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
அது, என்னெவெனில், கடந்த மாதத்தில் பிறந்தநாளை கொண்டாடிய பிரியங்காவுக்கு, பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் சேர்ந்து பிரியங்காவுக்கு பிறந்தநாளில் பல கிப்ட்கள் கொடுத்து இருக்கின்றனர்.
அந்த வீடியோவை அவர் ஒரு மாதம் கழித்து தற்போதுதான் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பாலாவுடன் பேசும் ஒரு பகுதியும் வெளியாகி இருக்கிறது.
அதில், “தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது, அதனால் நான், இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன்” என தெரிவித்து இருக்கிறார் பிரியங்கா.
அதற்கு பதிலளித்த பாலா மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கரிங் ஆகி விட முடியாது. மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது என்று கூறி பிரியங்காவின் உன்னை மாற்ற சொல்லி இருக்கிறார். இந்த தகவல் தான் தற்போது வைரலாக பரவத்தொடங்கி இருக்கிறது.