எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த புதிய திட்டம் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
நடைமுறையாகும் புதிய திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக மக்களுக்கு அனுமதியை வழங்கி அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.
எந்தவொரு வீட்டினதும் தொழிற்சாலைகளினதும் கூரைகள் மீது இலகுவாக பொறுத்தக் கூடிய சூரிய சக்தி தகடுகள் உள்ளன.
தடையில்லாத மின்சாரம்
இதனூடாக பகல் வேளையில் மின்சாரத்தை பெறமுடியுமாயின் தற்போது மின்னுற்பத்திகாக பயன்படுத்தப்படும் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தி இரவு வேளையில் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்.
இதற்கமைய 24 மணிநேரமும் துண்டிப்பின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.