சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவொன்றிலே அவர் இதனை அறிவித்துள்ளார்.
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயங்க வைக்கப் போவதாக கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் மூலம் அறிவித்திருந்தார்.
மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு
அதன் பிரகாரம் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க முயற்சிக்கையில் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் தற்போதைக்கு கோளாறை சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களில் அதனை சீர்திருத்திக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி மூடப்பட்டது.
அதன் பின்னர் நீண்ட காலம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமை காரணமாகவே இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.



















