தாழ் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகளவு மழை பெய்து வருவதனாலேயே தாழ் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நதிகளின் நீர்மட்டங்கள் உயர்வு
அத்தனகலு ஓயா, களனி, கிங் மற்றும் நில்வலா ஆகிய நதிகளின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளன.
எனவே இந்த நிதிகளை அண்டிய தாழ் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, காலி யக்காமுல்ல பகுதியில் கூடுதல் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் மத்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.