இருபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சொந்த வீடு வைத்துக்கொண்டு உத்தியோகபூர்வ இல்லத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பில் சொந்த வீட்டையும் வைத்துக்கொண்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மாதிவளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியிலும் வீடுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வீடுகளை பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆனாலும் கொழும்பில் சொந்த வீடு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவளை விடுதியில் வீடுகளைப் பெற்றுக்கொள்வது சட்டவிரோதமானதாக கருதப்படுகின்றது.
எனினும் அவ்வாறு வீடுகளை கொண்டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியக்கடதாசி சமர்ப்பித்து உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எனினும் அவ்வாறு பெற்றுக்கொண்ட வீடுகளை வெறுமனே மூடிவைத்துக்கொண்டு வேறு இடங்களில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.