துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது.
துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது. மனதுக்கு பிடித்தமானவர்களின் எதிர்பாராத பிரிவோ, மரணமோ மனதை உலுக்கிவிடும். அவர்களின் இழப்பை அவ்வளவு எளிதில் மனம் ஏற்றுக்கொள்ளாது. துக்கம் ஆக்கிரமித்து, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் மனம் தவிக்கும். இழப்பை சந்தித்த ஆரம்ப நாட்களில் துக்கத்தில் இருந்து மீள்வது கடினமான ஒன்றாக இருக்கும்.
`இழப்புகளால் ஏற்படும் துக்கம் எந்த அளவுக்கு மன, உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்?’ என்பது பற்றி ஆய்வு நடந்திருக்கிறது. அந்த ஆய்வில் நாளமில்லா சுரப்பிகள், நோயெதிர்ப்பு மண்டலம், இதயம் மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, கோபம், பதற்றம், பசியின்மை, உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் பாதிப்பு அதிகமாகும் என்பதும் தெரியவந்திருக்கிறது.
பொதுவாக துக்கம் சில மாதங்கள் நீடிக்கும். சிலருக்கு 12 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முடியும்.
பொதுவாக துக்கம் சில மாதங்கள் நீடிக்கும். சிலருக்கு 12 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது ஆரோக்கியத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முடியும். தனிமையை தவிருங்கள்: மனதுக்கு பிடித்தமானவர்களின் இழப்புக்கு பிறகு தனிமையை உணர்வது இயல்பானது. அவர்களின் ஞாபகங்கள் மனதை ரணமாக்கி கண்ணீரை வரவழைக்கும்.
அந்த சமயத்தில் ஆறுதல் சொல்வதற்கு யாரும் இல்லாத சூழலில் மன வேதனை அதிகமாகும். ஆதலால் தனிமையில் இருப்பதை தவிருங்கள். தனிமைப்படுத்திக்கொள்வது உங்கள் உணர்வுகளையும், ஆரோக்கியத்தையும் மோசமாக்கி விடும். உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: துக்கத்தை மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டிருப்பது மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தக்க சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியமானது. நெருக்கமாக பழகுபவர்களிடம் உள்ளக்கு முறல்களை கொட்டி விடுங்கள்.
உணர்ச்சிகளை ஒரேடியாக கட்டுப் படுத்தக்கூடாது. உணர்வுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். அழ விரும்பினால் அழுதுவிடுங்கள். ஓய்வு எடுங்கள்: எதிர்பாராத இழப்பு ஏற்படுத்தும் அதிர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் இருந்து மீளவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சமயத்தில் சோர்வை உணர்வது இயற்கையானது. வழக்கத்தை விட அதிக ஓய்வும், தூக்கமும் அவசியமானது.
சத்துணவு அவசியம்: துக்கத்தில் இருக்கும்போது சாப்பிட தோன்றாது. அது உடலை மேலும் பலவீனப்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியையும் பலவீனமாக்கும். அதனை தவிர்க்க ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமானது. உணவு சாப்பிட விரும்பாதபோது பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். தண்ணீர் பருகலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பது முக்கிய மானது. உடற்பயிற்சி: துக்கமாக இருக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது மனதை இலகுவாக்கும். மனச்சோர்வை போக்கி உடலை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டும். மன நிலையையும் மேம்படுத்தும்.