நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாக முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தகவல்
இதற்கமைய, நாளாந்த விநியோகம் சுமார் 2,500 மெற்றிக் தொன்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 40,000 மெற்றிக் தொன் டீசல் கையிருப்பில் உள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
தடைப்பட்ட டீசல் விநியோகம்
ஜூன் 9 அல்லது 10 ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த டீசல் பற்றி விநியோகஸ்தர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதனால் டீசல் ஏற்றுமதி நிச்சயமற்றதாக காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்திய கடன் உதவியின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதி டீசல் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் பெட்ரோல் விநியோகம் வழமை போன்று இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.