லண்டனில் மதுபானங்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 2008ல் இருந்து மதுபானங்களின் விலை 70% என்ற அளவில் உயர்ந்துள்ளது.
அதாவது பிரித்தானியாவில் ஒரு மதுபானத்தின் சராசரி விலை 2008 இல் £2.30 ஆக இருந்ததில் இருந்து இந்த ஆண்டு £3.95 ஆக அதிகரித்துள்ளது.
பார்லியின் விலை அதிகரிப்பு
உக்ரைன் போர் காரணமாக பீர் தயாரிக்கும் பார்லியின் விலை அதிகரித்துள்ளமையினால் மதுபான விடுதிகளில் கடுமையாக விலையை மேலும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பீர் விற்பனை அளவு 0.7 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அவற்றின் மதிப்பு 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.