வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. மற்ற பழங்களை ஒப்பிடும் பொழுது வாழைப்பழம் மலிவான விலையில் கிடைக்கின்றது.
விலை குறைவாக இருந்தாலும் இதன் பயன்கள் ஏராளம். ஆனால் வாழைப்பழத்தை கண்ட நேரத்தில் சாப்பிட கூடாது. இதனை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது.
இந்நிலையில் வாழைப்பழத்தை சிலர் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக இரவில் சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிக்கல் குறித்து பார்க்கலாம்..
உறங்கும் முன்பு வாழைப்பழம் வேண்டாம்
வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஆனால் உறங்குவதற்கு முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல.
வாழைப்பழத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது.குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு இருக்கும். அது போல Fructose என்கின்ற சர்க்கரை வகை வாழைப்பழம் சாப்பிட்டவுடன் கொழுப்பாக மாறி நம் உடலில் நிரந்திரமாக தங்கி விடும்.
பசியின் போதும் சாப்பிடக்கூடாதா?
வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது கட்டாயம்.
வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவித்திடும். சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் அதீத பசி உண்டாகிடும். அப்போது நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்தை காலை உணவாக நீங்கள் எடுக்கலாம். அவ்வாறு எடுத்து கொள்வதால் உங்களது இன்ஸுலின் அளவு அதிகரிக்க உதவுகிறது.