ஐபோனை என்றால் பலருக்கு அதீத பிரியம் இருக்கும். அப்படிப்பட்ட விலையுர்ந்த ஐபோனை அடுத்தடுத்த மாடல்களை வாங்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புது வரவான ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஆகிய சாதனங்கள் நிறுவனத்தின் புதிய iOS 16 மூலம் Always On ஆதரவைப் பெறும் என்று சமீபத்திய அறிக்கை கூறியுள்ளது.
அதன்படி, புதிய iOS பதிப்பு 16, அடுத்த வாரம் WWDC 2022 முக்கிய நிகழ்ச்சியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் iOS 16 ஆனது புதுப்பிக்கப்பட்ட மெசேஜ்கள், புதிய சோசியல் நெட்வொர்க் போன்ற அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், புதிய iOS 16 வெளியீட்டுடன், குபெர்டினோ நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட iPadOS, watchOS, tvOS மற்றும் macOS ஆகியவற்றை WWDC 2022 இன் முக்கிய உரையில் காண்பிக்கும் என தெரிகிறது.
ஆப்பிள் ஆடியோ செய்திகளை நோக்கி புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
புதிய iOS 16 பதிப்பில் வால்பேப்பர்கள் மற்றும் விட்ஜெட் போன்ற திறன்கள் உள்ளிட்ட முக்கிய லாக் டிஸ்பிளே மேம்பாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆப்பிள் டிவி பயனர்கள் சில மேம்படுத்தல்களை கொண்டுவரப்போகிறது.