லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
லிட்ரோ எரிவாயு விலை
அதன்படி விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
லாஃப் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை நேற்றைய தினம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே லிட்ரோ நிறுவனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு விநியோகம்
மேலும், 12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடையுள்ள வீட்டு சமையல் பாவனைக்கான எரிவாயு நாளை மறுதினம் வரை விநியோகிக்கப்பட மாட்டாது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கையில் போதிய கையிருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயு கொண்டு வரும் சரக்குக் கப்பல் விரைவில் நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.