கடந்த நான்கு நாட்களில் இலங்கையில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
இன்றைய தினம் கொழும்பு மோதரை பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணம் செய்த துப்பாக்கிதாரி இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு கோட்டே, பாணந்துறை உள்ளிட்ட சில பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.