லிந்துலை – பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேனை, வலஹா பிரதான வீதியோரத்தில் சிசு ஒன்றின் சடலம் இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிசுவின் சடலம்
சிங்கள மஹா வித்தியாலயம் மற்றும் ரோயல் கல்லூரிக்கு செல்லும் வழியில் குறித்த சிசுவின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு தகவல்
சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.




















