இந்திய வங்கியின் உதவி
விவசாய உரக்கொள்வனவுக்காக இந்திய அரசாங்கத்தின் சார்பில் , அந்த நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, 55 மில்லியன் டொலர் குறுகிய காலக் கடனை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.
இதனை அந்த வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
உடன்படிக்கை
இது தொடா்பான உடன்படிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் நிதி, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன மற்றும் எக்ஸிம் வங்கியின் பொது முகாமையாளர் நிர்மித் வேத் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் வைத்து கைச்சாத்ததிட்டனர்.
இந்த உடன்படிக்கையுடன் எக்ஸிம் வங்கி, தற்போது வரை இந்திய அரசாங்கத்தின் சார்பாக இலங்கை அரசாங்கத்துக்கு 11 கடன்களை வழங்கியுள்ளது.
இந்த கடன் தொகையின் மொத்த மதிப்பு 2.73 பில்லியன் டொலர்களாகும்.
ஏற்கனவே இந்த கடன் வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்கள் வழங்கல், தொடரூந்து பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் உள்ள திட்டங்களும் அடங்குகின்றன.