பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
“எம்.சி.சி உடன்படிக்கை மூலமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளது. இது கிடைத்திருந்தால் இன்று நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்குமென்று” அவர் குறிப்பிட்டுள்ளார்.